நண்பன் ஒருத்தன் மெயில் அனுப்சினுருந்தான். அத்த ஓபன் பண்ணாக்க,அப்டியே ஷாக் ஆயிட்டேன்.இன்னாட நமக்கு போயி இங்கிலீஸ்ல எயுதிஇருககான் நம்ப பத்தி தான் தெரியுமே அப்டின்னு நினச்சினு இருக்க சொல்லோ, இன்னொரு தோஸ்த் வந்தான் "வாடா மச்சான் இதில இன்னாமோ இருக்கே பட்சி சொல்லுடா"ன்னேன் .அவன் எப்டின்னக்க நம்ப டி.ராஜேந்தர் எம்.ஏ ரெண்டு தாட்டி பட்சாராம்மே அது மேரி ஈ.எஸ்.எஸ்.எல்.சி ய மூணு தாட்டி பட்சிக்குறான்.எங்க கேங்குல அதிகமா பட்ச்சது அவன்தான் அவன் என்னமோ டிக்சனரிஎல்லாம் பார்த்து கடசில சொன்னது இததான்.
வட கொரிய நாட்டு எல்லய இல்லீகலா அத்தாங்க சட்டத்துக்கு புறம்பா கடந்தீன்கன்னா? பன்னெண்டு வர்சம் கொத்தடிமை ஆக்கிடுவானுங்கோ.
ஈரான் நாட்டு பார்டர க்ராஸ் பண்ணாக்க நிச்சையமிலாத ஜெயில்.
ஆப்கன் நாட்டு பார்டர இல்லீகலா க்ராஸ் பண்ணீங்கனா உடனே சுட்ருவாங்க.
சவுதி அரேபியா பார்டர க்ராஸ் பண்ணாக்க ஒடனே ஜெயில் தான்..
சைனீஸ் பார்டர தாண்டுனாக்கா எப்பயும் திரும்ப முடியாது..
வெனிசுலா பார்டர க்ராஸ் பண்ணா உளவாளின்னு முத்திரை குத்தி சாவடிக்கிரதுக்கு நாள் குறிப்பானுங்க
கியூபா பார்டர கிராஸ் பண்ணாக்க அரசியல் எதிரியா கருதி ஜெயில்ல தூக்கி போட்டு கெடு வைக்கப்படுவீர்கள் ...
பிரிட்டன் நாட்டின் எல்லய கடந்தா கைது பண்ணி வழக்கு தொடர்ந்து ஜெயில்ல தள்ளப்படும் .அல்லது,நாடு கடத்தப்படுவார்கள்.
பாக்கிஸ்தான் அல்லது பங்களா தேஷ் அல்லது இந்திய பார்டரை சட்டத்திற்கு புறம்பாக கடந்தால் உங்களுக்கு கிடைப்பது.
ரேசன் கார்ட்.
பாஸ்போர்ட்.
டிரைவர் லைசென்ஸ்.
ஓட்டர் ஐடெண்டி கார்ட் .
வேலை வாய்ப்பு பதிவு .
சிறப்பு சலுகை.
கிரெடிட் கார்டு .
இலவச கல்வி .
இலவச சுகாதார பாதுகாப்பு .
பேச்சு சுதந்திரம் அளிக்கப்படும் .
மீடியாக்களில் பெரிதும் பேசப்படுவீர்கள்.
ஒலக விசயங்கள் அனுமதிக்கப்படும்.
வீட்டுக்கு திரும்ப போகும் எண்ணமே இருக்காது.
முக்கியமா ஓட்டுரிமை அளிக்கப்படும்.
ஏன்னா இது ஜன நாயக நாடு.
என்ன கொடும சார் இது?
என்னா தல அல்லாத்தையும் பட்சிங்களா? பட்சிட்டு அப்டியே கெளம்புனா எப்டி?ஒரு குத்து குத்தின்னு, பின்னூட்டம்ல்லாம் போட்டு போங்க தல.
Saturday, February 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment