Wednesday, February 10, 2010

அதிகமாக மது குடித்ததின் விளைவு!

பிரெஞ்ச் நாட்டு மன்னன் லூயிஸ்பிலிப்ஸ்க்கு ஒரே ஒரு மகன். அந்த இளவரசன் நண்பர்களோடு மது அருந்தும்போது கொஞ்சம் அதிகமாக குடித்துவிட்டான்.


அரண்மனைக்கு தன கோச் வண்டியை ஓட்டிசெல்லும்போது, குடிபோதையிலிருந்த அவன் சாட்டையைக்கொண்டு குதிரைகளை பலமாக அடித்துவிட்டான்.குதிரைகள் வலியை தாங்கிக்கொள்ள முடியாமல் வண்டியை தாறுமாறாக இழுத்துக்கொண்டு வேகமாக ஓட ஆரம்பித்தன.பயந்துவிட்ட இளவரசன் வண்டியிலிருந்து கீழே குதித்தான்.மதுவின் ஆதிக்கத்தால் தன்னை சமாளித்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது.அவனுடைய தலை தரையின்மீது வேகமாக மோதியதால் இறந்துவிட்டான் .

ஒரு கோப்பை மது அதிகமாக குடித்ததின் விளைவு,ஒரு சக்தி வாய்ந்த நாட்டின் வாரிசான இளவரசன் உயிர் துறக்க நேர்ந்தது.அந்த இளவரசனுக்கு இப்படிப்பட்ட மரணம் ஏற்ப்படாமல் இருந்திருந்தால், பிரெஞ்சு நாட்டின் மன்னனாக நாட்டை ஆண்டு வந்திருப்பான்.

வேறு ஒருவன் அந்த நாட்டின் அரசனாக முடிசூடிக்கொண்டு,இளவரசனுடைய குடும்பத்தை நாட்டைவிட்டே துரத்திவிட்டான்.


நாட்டின் வருவாய் ஆதாரங்களில் மதுவுக்கு முக்கிய பங்கு.ஆனால்,

நாட்டின் ஆதாரங்களாய் விளங்கும் இளைங்கர்களை சீரழிப்பதிலும் மதுவுக்கு முக்கிய பங்கு.

நாட்டின் நடக்கும் குற்றங்களிலும் மதுவுக்கு முக்கிய பங்கு.

உலகில் சாலை விபத்துக்களினால் ஏற்ப்படும் உயிரிழப்புகளில் இந்தியாவுக்கு இரண்டாவதிடம். இதிலும் மதுவுக்கு முக்கிய பங்கு.



காசு கொடுத்து அழிவை தேடுவதைவிட,அந்த காசை ஏழை குழந்தைகளின் கல்விக்கும்,இயலாதோருக்கும்,அனாதைகளுக்கும் உதவ உபயோகப்படுத்தினால் நம் தமிழினம் காலம்காலமாய் யாரும் அழிக்க முடியாதளவிற்கு உயர்ந்து நிற்கும்.





சீக்கியர்களில் பிச்சைக்காரர்கள் கிடையாதாம். ஆனால்,நம் தமிழினமோ?......
உண்மை என்னை சுடுகிறது. உங்களையும் சுடட்டும் ....












சுடுபட்ட நெஞ்சங்கள் பின்னூட்டமும்,ஓட்டும் இடுங்கள் .

No comments:

Post a Comment