Wednesday, March 10, 2010

ரஞ்சிதாவும்,நித்யானந்தாவும் பின்ன நக்கீரனும்

இன்னிக்கு காத்தால என் செல்லுல ஒரு மெசேஜ் வந்துது இன்னாடா நம்பர் புச்சாக்குதேன்னு ஓபன் பண்ணி பாத்தா "நித்தியானந்தா,ரஞ்சிதா லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் எக்ஸ்குளுசிவ் நியூஸ் & வீடியோ பார்க்க நக்கீரன்.இன்.வாங்க அப்டி போட்ருந்துச்சி. செரி நம்ப மச்சான் எவனாவது சொம்மா கலாயிக்குறானுங்க அப்டின்னு வுட்டுட்டேன் .ஆனா ஏர்டெல் நம்பர் எல்லாத்துக்கும் வந்திச்சு.அப்புறம்தான் இது நக்கீரன் வேலை இத்தக்காட்டி துட்டு சம்பாரிக்கிரானுங்கோ ன்னு என் தோஸ்து சொன்னான்.

அட கருமம் புட்சவனுங்களா. பெரிய மீச வச்சிக்குனு இதெல்லாம் ஒரு பொயப்பா பத்திரிகை,டி .வி .கெல்லாம் சென்சார் இல்லேன்ட்டு ரொம்ப ஆடுறானுங்க. ஏம்பா உங்க ஊட்லேல்லாம் பொம்பளைங்க ,புள்ளைங்க எல்லாம் கடியாதா? எனுக்கே கண்ணு கூசுது டி.வி. பாக்கசொல்ல இத்த வேற புதுப்படம் கணுக்கா பத்துநிமிசத்துக்கு ஒரு தாட்டி போடுரீங்கோ உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கடியாதா?

புள்ள குட்டிகள பரீட்சிக்கு படிக்க விடுங்கடா உங்களுக்கு புண்ணியமா போவும்.






பின்னே என்ன பாஸ் பட்சிட்டின்கல்ல, ஒட்டு போடுறது இல்ல பின்னூட்டம் எயுதறது ஒண்ணுமே செயாம போன எப்டி?

3 comments:

  1. நக்கீரன் ஒரு மஞ்சள் பத்திரிக்கை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே! பாதி வீடியோவை ஃபிரியா விட்டுட்டு மீதியப் பார்க்க சப்ஸ்கிரிப் பண்ணுங்கன்னு போட்டவங்களுக்கும் ரஞ்சிதாவுக்கும் ஒண்ணும் பெரிய வித்தியாசம் எல்லாம் இல்லை.

    ReplyDelete
  2. நம்பர் ஒன் டுபாக்கூர் பத்திரிக்கை என்ற பெயர் "நக்கீரன்"க்கு மட்டும் தான் கன கச்சிதமாக பொருந்தும்.

    ReplyDelete
  3. தமிழன், தமிழ்மகன் ,ரெண்டு பேத்துக்கும் வணக்கம், அல்லாத்துக்கும் நக்கீரன பத்தி தெர்ஞ்சிருக்கு இந்த மரமண்டைக்கு இப்பத்தான் புரியிது. இதுக்குத்தான் நாலு பட்சவங்க வோனுன்றது. நன்றிங்க்னா!!வந்ததுக்கு

    ReplyDelete